இலங்கை தீவில் தமிழ் இன மக்கள் மீது மேற்கொள்ளபபட்டுவரும் இனப்படுகொலை, நில அபகரிப்பு, போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின்; எழுச்சிகரமான உரிமைப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
இன்று 26ம் திகதி (புதன்கிழமை) தாயகம், தமிழகம், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தீவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசுகளினால் திட்டமிட்டு மேட்கொள்ளபபட்டுவரும் இனபடுகொலைகள், நிலஅபகரிப்பு, மற்றும் 2009ம் ஆண்டு 70000 அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தமை போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டி எழுச்சிப்போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டம் பிரித்தானியாவில் இன்று மாலை 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை no 10 downing street பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் இன் இல்லத்திற்கு முன்பாக நடாத்த பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
















