தற்கொலைச் சம்பவங்களுக்கு முகநூல் இணைய வலைத்தளம் காரணமல்ல என ஜே.வி.பி ஆதரவு இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்களின் அடிப்படையில் முகநூலை தடை செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.
சில அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் முகநூல் பயன்பாட்டுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஆகியோர் முகநூல் பயன்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகநூல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவும் பொருந்தாக் காதல் காரணமாக இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்கொலைச் சம்பவங்கள் ஒன்றும் புதிதல்லவே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் 80000 பேர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும், 400,000 பேர் தற்கொலை செய்துள்ள நினைப்பதாகவும் தற்கொலைகளைத் தடுக்கும் உலக அமைப்பு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முகநூல் பயன்பாடு பயனற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















