‘ரேணிகுண்டா’ படத்தில் அறிமுகமாக சஞ்சனா சிங் தொடர்ந்து ‘கோ’ உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது ‘மீகாமன்’, ‘வெயிலோடு விளையாடு’, ‘விஞ்ஞானி’, ‘வெற்றிச் செல்வன்’, மயங்கினேன் தயங்கினேன்” ரெண்டாவது படம்’ உட்பட அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.
கடந்த 23-ஆம் தேதி தனது பிறந்தநாளை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய இந்த பஞ்சாபி குதிரை முடிந்தவரை தமிழில் பேசி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் தமிழில் பேசியதாவது :
‘தமிழ் அழகான மொழி இனிமையான மொழி .நான் நன்றாக தமிழ் கற்று அழகாகப் பேச ஆசைப்படுகிறேன்’ ” நான் ‘ரேணிகுண்டா’வில் அறிமுகமானேன். பெரிய ரோல் இல்லை என்றாலும் பெயர் சொல்லும்படி அடையாளம் தரும்படி அமைந்தது. இயக்குநர் பன்னீர் செல்வம் தந்த அந்த முதல் வாய்ப்பை மறக்க முடியாது.
நான் நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டது. சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன். ஹீரோயினாக நடிக்கவே வந்தேன். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் வரை நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. சிறுது நேரம் வந்தாலும் நினைவில் நிற்கும் படியான வேடத்திலும் நடித்தேன். அதன் மூலம் சில நடிப்பு அனுபவங்கள் கிடைத்ததை மறக்க முடியாது.
‘ரேணிகுண்டா’ வில் நடித்தஅந்த கிராமத்து கேரக்டரை மறக்க முடியாது. அதேபோல சிட்டி பின்னணியில் இப்போது ‘மீகாமன்’ படத்தில் நடிக்கிறேன்.” என்றார்.
“நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் இங்கு சென்னை வந்தபோது ஒல்லியாக இருந்தேன். எனக்குத் தமிழும் தெரியாது. இந்த இரண்டு பிரச்சினையையும் முதலில் எடுத்துக் கொண்டேன். இங்கு ஒல்லியாக இருந்தால் பிடிக்காது. ரசிக்க மாட்டார்கள். குண்டாக இருக்க வேண்டும்.
கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் தமிழ்நாட்டில் ரசிப்பார்கள் எனவே முதலில் கொஞ்சம் வெயிட் போட்டேன் தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தேன் ‘ரேணிகுண்டா’வில் நடித்த போதே டைரக்டரிடம் எனக்கான வசனத்தை முதல்நாள் கொடுத்து விடும்படி கேட்பேன். வாங்கி வந்து மறுநாளே தமிழில் பேசி நடித்துக் காட்டி விடுவேன். அவரே ஆச்சரியப்பட்டு பாராட்டுவார். அவர் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்ததால்தான் எனக்கு உங்கள் முன் நிற்கும் இந்த இடம் கிடைத்துள்ளது.” என்றார்.
தாய்மொழி தமிழைப் பேச கூச்சப்படும் நம்மவர்கள் மத்தியில் வட இந்தியாவிலிருந்து வரும் நடிகை இப்படி ஆர்வம் காட்டுவது பாராட்டப்பட வேண்டும். ஊடக வெளிச்சத்தில் மேலேறிச் சென்று இன்று கோடி கோடியாக சம்பளம் வாங்கும் பல நடிகைகளிடம் இல்லாத நன்றியுணர்வு சஞ்சனா சிங்கிடம் இருக்கிறது சபாஷ்.
















