கல்குடா கல்வி வலயத்தில் உள்ள சுங்காங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.மகேந்திரன்; தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் (உடற் கல்வி) கே.சுபாசந்திரன், மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இப் போட்டி நிகழ்ச்சிகளில் சோளன் (நீலம்) இல்லம் 307 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், சேரன் (பச்சை) இல்லம் 297 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும்;, பாண்டியன் (மஞ்சள்) 220 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கும், இல்லங்களுக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் பரிசில்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
















