ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் மியன்மாரில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் மன்மோகன் சி;ங் பங்கேற்காமையைத் தொடர்ந்து, முதல் தடவையாக இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.
மார்ச் மாதம் 4ம் திகதி மியன்மாரில் பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறவுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய வெளிவிவகார் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து சிங் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
தீர்மானம் தொடர்பிலான ஆவணத்தை ஆராய்ந்ததன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















