பா.ஜ.க ஆட்சியமைத்தால் ராஜபக்ச அராஜகத்துக்கு முடிவு; பொன்.ராதாகிருஷ்ணன்

bjp_CIபா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இலங்கையின் ராஜபக்ச அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்தபோது அங்கு ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிப்பதை தாம் ஆதரிக்கவில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.அவர் தன்னுடைய பின்புலம் தெரியாமல் பேசுவது கேலியாக உள்ளது ஏன்றார்.

இதேவேளை, பா.ஜ.க மதவாதக் கட்சி என்பதால் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க.வும், தி.மு.கவும் கூறுகின்றனவே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதிலளித்த போது, தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஏற்கெனவே பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்ததுடன் பதவிகளையும் சுகத்தையும் அனுபவித்தவர்கள்தான்.

எனினும் தமிழர் இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் அரசை வேரறுக்க வேண்டும். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், ராஜபக்ச அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம் என்றார்.

Tags: , ,

Leave a Reply