பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மாணவிகளுக்கு செக்ஸ் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளன.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இவற்றுக்கு மாறாக சிந்து மாகாணத்தில் உள்ள ஜோஹி கிராமத்தில் மாணவியர்களுக்கு பாலியல் கல்வி வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பாலியல் கல்வியை கிராமத்தின் ஹாதாபாத் அமைப்பினரால் வழங்கப்படுகிறது. எட்டு வயது முதலே பாலியல் கல்வி தொடங்கி விடுகின்றன. உள்ளூரில் உள்ள எட்டு பள்ளிகளில் 700 மாணவிகள் படிக்கின்றனர். பாலியல் கல்வியை கிராம மக்கள் வரவேற்கின்றனர்.
ஆண்களிடம் எப்படி நடந்து கொள்வது?, பருவம் எய்துவது குறித்த தகவல்கள், தொடு உணர்ச்சிகளை எப்படி அறிந்து கொள்வது ஆகியவை குறித்து கற்பிக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடும் ஆண்களை என்ன செய்வது என்பது குறித்த விழிப்புணர்வும் போதிக்கப்படுகிறது.
இந்தக் கல்விக்கு அந்நாட்டு தனியார் பள்ளிகளின் அமைப்பும், கல்வி அமைச்சரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், பாகிஸ்தான் உலமா கவுன்சில் தலைவர் வரவேற்றுள்ளார்.
பெண் ஆசிரியர்களை வைத்து கற்பிக்கப்பட்டால் தவறில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
















