இலங்கை தனது சொந்தப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் முனைப்புக்களில் ஈடுபட வேண்டும் என தென்னாபிரிக்க அறிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவின், சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் எமிலிங்கோனா மாஷாபனே ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் இன்று உரையாற்றினர் அதன் போதே இதனை அறிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண வேண்டும் இதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
எனினும் இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வைக் கண்டுபிடிக்க இந்த 25வது மனித உரிமைகள் மாநாடு மிக முக்கியமானதாகும்.
எங்களுடைய சொந்தப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றிற்கு நாமே தீர்வு காண வேண்டும். இதனையே இலங்கையும் கடைப்பிடிக்க வேண்டுமென தென்னாபிரிக்க மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
இதேவேளை, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த மாதம் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்து, அந்தநாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















