பாதரக்குடி வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது அந்த வழியாக வந்த சொகுசு கார் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுமி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
காணமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கு சிறுமி மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் முச்சக்கரவண்டி மீது மோதிய கார் நிற்காமல் வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி சென்றதாக பொதுமக்கள் சீர்காழி பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சீர்காழி பொலிஸார் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதனை அடுத்து விபத்துகுள்ளான கார் செங்கமேடு பைபாஸ் சாலையில் டீசல் இல்லாமல் பாதியிலேயே நின்றுவிட்டது.
உடனே பொலிஸார் காரையும், அதில் இருந்த ஒருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் காரில் இருந்தவர் சென்னை அண்ணாநகர் டி.வி.எஸ். காலனியை சேர்ந்த டி.வி. நடிகர் சீனு என்கிற ஷ்யாம் என்பதும் தெரியவந்தது.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஷ்யாமை பொலிஸார் கைது செய்தனர்.
















