ஒரு பெண்ணானவள் தொடர்ந்து குறைகள் சொல்லிக் கொண்டே இருப்பாளானால் அவளது கணவன் தாக்குதல் மூலம் அவளுக்குப் பதிலளிப்பதென்பது இயற்கைதான்” “சம திறமையுள்ள பெண்கள் சம சம்பளம் கேட்டுநிற்பது நியாயமில்லை. ஏனென்றால் அவர்கள் குழந்தை பெறுவதற்காக வேலையை நிறுத்த வேண்டியிருக்கும்” “”மனைவி விசுவாசமுள்ளவளாய் இருக்கவில்லை யென்பதற்காக அவளைக் கொலை செய்யும் கணவனுக்கு இலகுவான தண்டனை வழங்கப்பட வேண்டும்” இவையயல்லாம் நீதிவான்கள் வழங்கியுள்ள தீர்ப்புகள், இவை 100 வருடங்களுக்கு முந்தியவையன்று
. கடந்த 10 ஆண்டு கால இடைவெளிக்குள் வழங்கப்பட்டவை. இவை குற்றங்களின் தன்மையைப் பொறுத்து வழங்கப்பட்டவையல்ல. பெண்களின், சிறுமிகளின் உரிமைகள், பாதுகாப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டவை. இந்த வழக்குகளில் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நீதிமன்றங்களில் தினம் தினம் இவ்வாறுதான் பெண்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சர்வதேச பெண்கள் உரிமை தினத்தையயாட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். நாளை மறுதினம் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாகும். அதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பால்நிலை விடயங்களில் குற்றவியல் நீதித்துறையின் சகல பிரிவுகளிலும் இம்மாதிரி ஒரே மாதிரியான தவறுகள் இடம் பெறாதவாறு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலனாய்வு வழக்காடுதல், கேள்விகள் எழுப்புவது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு, தீர்ப்பு வழங்கல் முதலியவை இதில் உள்ளடக்கப் படவேண்டும். அரச ஊழியர்கள் குறிப்பாக நீதித்துறையில் பணி புரிவோர், ஒரேவிதமான கெடுதிதரும் தீர்மானங்களை அறிவித்து பெண்கள், சிறுமிகளின் மனித உரிமைகளை சீர்குலைக் காமல் இருப்பதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அரச அதிகாரிகள் எதிர்மறை யான நம்பிக்கைகளை இனங் கண்டு முறியடிப்பவர்களாக இருப்பதுடன் பெண்களின், சிறுமிகளின் மனித உரிமைகள் மதிக்கப்படுபவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குப வர்களாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் சமநிலையான கலாசாரம் ஒன்று உதயமாக உதவ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். பல முன்னேற்றங்கள் அதில் தங்கியுள்ளன பான்கி மூன் சர்வதேச மனித உரிமை தினத்தையயாட்டி நாங்கள் பெண்களின் சிறுமிகளின் சமத்துவத்தை வலியுறுத்தி நிற்பதற்கு அது நியாயமானது, அடிப்படையான மனித உரிமையாக இருப்பது மட்டும் காரணமல்ல. வேறுபல துறைகளில் ஏற்படவேண்டிய முன்னேற்றங்களும் இதன் மீதே தங்கியுள்ளன என்பதும் காரணம்தான். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன். சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிக பால்வினை சமத்துவ முள்ள நாடுகள் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. அதிக பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் மேலும் சிறப்பான செயற்பாடுகளை வெளியிடுகின்றன.
பெண்களைச் சம்பந்தப்படுத்தும் அமைதி உடன்படிக்கைகள் நீடித்துச் செயற்படுகின்றன. அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றங்கள் சுகாதாரம், கல்வி, பாகு பாடற்ற மற்றும் குழந்தைகளுக் கான ஆதரவு போன்ற மிக முக்கிய சமூக நலச் சட்டங்களை நிலை நாட்டுகின்றன. பெண்களுக்கு சமத்துவம் என்பது எல்லோருக் குமான முன்னேற்றமே. அதற்கான ஆதாரம் தெளிவாக உள்ளது. பெண்களுக்கு ஒரு செய்தி இன்று பிறக்கும் ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் நான் கூறும் ஒரு தகவல் இதுதான். இது நமது கோளத்திலுள்ள எல்லாப் பெண்களுக்கும் சிறுமிகளுக்குமுரியது. மனித உரிமையை மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவ தென்பது வெறும் கனவு அன்று. அது ஒவ்வொரு அரசினதும் ஐ.நா.வினதும் ஒவ்வொரு மனிதனதும் கடமையாகின்றது. என்னிடம் இன்னுமொரு செய்தி இருக்கிறது. அது சக மனிதர்களுக்கும், சிறுவர்களுக்குமுரியது. உங்கள் பங்கினை நிலை நாட்டுங்கள். பெண்கள் சிறுமிகள் எங்கள் தாய்மார், சகோதரிகள், நண்பர்கள், சகபாடிகள் ஆகியவர்கள் தமக்குரிய முழுத்தகுதியையும் பெறும் போது நாம் அனைவரும்பயனடைகின்றோம். பெண்களின் உரிமைகளுக்காக அனைவரும் சேர்ந்து ழைப்போம். வறுமையை ஒழிக்கவும், நிலையான வளர்ச்சியைக்காணவும் நாம் உழைக்கின்ற அதே வேளை, பெண்களின் உரிமைகள், அதிகாரம் மற்றும் பால் நிலைசமத்துவத்துக்காகவும் பணி புரிவோம். பெண்களுக்கு சமத்துவம் என்றால் சகலருக்குமான முன்னேற்றம் என்பதே. அதன் கருத்து என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களின் சமத்துவம் சகலருக்கும் முன்னேற்றம் பெண்களுக்கான சமத்துவம் சகலருக்குமான முன்னேற்றம் என்பது இந்த வருட சர்வதேச பெண்கள் தினத்தின் கருப்பொருளாகும். எந்தவொரு நாடும் தனது பெண்குடி மக்களுக்கு சமத்துவம் அளிக்காது போனால் அதன் முழு சிறப்புகளையும் பெற்று அந்த நாடு முன்னேற முடியாது என்று தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் உரிமை தினத் தையயாட்டி ஐ.நா. வளர்ச்சித் திட்ட நிர்வாக அதிகாரி யஹலன் கிளார்க் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது; பெண்களுக்கான சமத்துவத்தை யதார்த்த பூர்வமாக்கும் விதத்தில் எமது முயற்சிகளை இரு மடங்கு அதிகமாக்குவோம். இதன் மூலம் கல்வி, மூலவளங்கள், கண்ணியமான தொழில்கள் மற்றும் சமத்துவ சம்பளம் முதலியவை அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவோம். இதன் கருத்து கட்டமைப்புத் தடைகள், பாகுபாடான சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள், பால்நிலை செயற்பாடுகளை அகற்றுவதாகும். இதனால் அதிக பெண்கள் அரசியலில் ஈடுபட முடியும். அவர்களின் வாழ்வியலை பாதிக்கும் விடயங்களில் தீர்மானம் எடுப்பதில் அவர்களும் பங்கேற்பதாக இருக்கும். அத்துடன் பெண்கள் வன்முறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். தமக்குத் தேவையான பால்நிலை சுகாதாரம் தொடர் பான முடிவுகளையும் அவர்களே தெரிவு செய்து கொள்வதாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
















