உலகிலேயே அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொண்ட வயது குறைந்த நபர் : பிரித்தானிய 13 வயது சிறுவன் சாதனை

talent boyஅணுப் பிளவு உபகரணமொன்றை தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய உலகிலேயே மிகவும் வயது குறைந்தவர் என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ஜெமி எட்வார்ட் பெறுகிறான்.

லான்கஷியரிலுள்ள தனது பாடசாலை ஆய்வு கூடத்தில் புதன்கிழமை அணுப்பிளவின் முயற்சி மூலம் ஹீலியத்தை உருவாக்கி ஜேமி சாதனை படைத்துள்ளார்.

ஜேமி ஆய்வு கூடத்தில் அணுப்பிளவு பரிசோதனையை மேற்கொள்ளப்போவதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அணு பரிசோதனை மூலம் நீ பாடசாலையை தகர்க்கப் போகிறாயா? என அவர் ஜேமியிடம் வினவியுள்ளார்.

எனினும் ஜேமி தனது பரிசோதனை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத பாதுகாப்பான ஒன்றென்பதை விளக்கியதையடுத்து அவர் அவனுக்கு பரிசோதனையை மேற்கொள்ள அனுமதித்துள்ளார்

Tags: , ,

Leave a Reply