பல்வேறு சந்தர்ப்பங்களில் அநீதி இழைக்கப்படுகின்ற பெண்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வருகின்ற மனுக்களை விரைவாக ஆராய்ந்து தீர்வுகளை காணும் பொருட்டு பொதுமக்கள் மனு தொடர்பான தெரிவுக்குழுவுக்கு உதவியாக உப குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வில் சபாநாயகரின் அறிவித்தல் நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:- பல்வேறு வழிகளிலும் அநீதிக்கு இலக்காகும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக முன் வைக்கப்படும் மனுக்களை விரைவாகவும் அதேநேரம் ஆக்கபூர்வமாகவும் ஆராய்ந்து தீர்த்து வைக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பவித்திரா வன்னியாராட்சி, நிருபமா ராஜபக் ஷ தலதா அத்துக்கோரள மற்றும் ரோசி சேனாநாயக்க ஆகிய உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
பொதுமக்களின் மனுக்களை ஆராய்வதற்கான குழுவின் உப குழுவாகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
















