வடக்கின் தமிழ்ப் பெண்களை இலக்கு வைக்கும் இலங்கை இராணுவம் மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைப்பு

Tamilgirlsசிங்கள மயமாக்கல் திட்டத்தின் பிரதான செயற்பாடே இது – பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை வடக்கின் குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் தமிழ்ப் பெண்களை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைப்பதற்கு காரணம் சிங்கள மயமாக்கல் திட்டத்தின் பிரதான செயற்பாடே என அரசாங்கத்துடன் நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இராணுவத்தில் இணைக்கப்படும் பெண்கள் காலப்போக்கில் சிங்கள இராணுவ சிப்பாய்களை மணம் முடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் அதன் மூலம் வன்ன்னிப் பகுதி தவிர்க்க முடியாத இராணுவக் குடியிருப்புக்களை கொண்ட நிலமாக மாறும் எனவும் இதனை தமிழ்த் தேசிய வாதிகள் சட்ட ரீதியாகவோ, தர்ரக்க ரீதியாகவோ எதிர்க்க முடியாத நிலை உருவாகும் எனவும் எதிர்வரும் 10 வருடத்தில் வன்னி தமிழ் சிங்கள கலப்புக் குடும்பங்களை கொண்ட பகுதியாக மாறும் எனவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply