கண்மென்சவ்வில் இருதய வடிவ பிளாட்டினத்தை பொருத்திக் கொண்ட பெண்

Platinum-Jewelry-Implanted-in-Womans-Eyeநவநாகரீக உலகில் அதீத செயற்பாடுகளை மேற்கொள்ளவதில் தீவிர ஆர்வமுடைய பெண்ணெருவர் தனது கண் மென்சவ்வில் இருதய வடிவான மெல்லிய பிளாட்டினம் தகடொன்றை வெற்றிகரமாக பொருத்திக் கொண்டுள்ளார்.

அமெரிக்க நியூயோர்க் நகரைக் சேர்ந்த கிறிஸ்ரினா கொவலெவ்ஸ்கியா என்ற மேற்படி பெண் கண்களில் ஆபரணங்களை பொருத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரான எமில்ல சைன்னின் உதவியுடன் இந்த 3.5 மில்லிமீற்றர் அளவான இருதய வடிவ பிளாட்டின தகட்டை தனது கண் மென்சவ்வில் பொருத்திக் கொண்டுள்ளார்.

இந்த செயற்பாட்டில் கண்ணில் நோய் தொற்று ஏற்படலாம் என அமெரிக்க தேசிய கண்ணியல் நிறுவகம் எச்சரித்துள்ளதையும் அலட்சியம் செய்தே கிறிஸ்ரினா இவ்வாறு தனது வலது கண்ணில் பிளாட்டினத்தை பொருத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் எமில் சைன் விபரிக்கையில் கிறிஸ்ரினாவின் கண்ணில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க நோயெதிர்ப்பு மருந்துக்களை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply