சந்திரிக்கா ஹக்கீம் ஆகியோரின் உண்மைகளை வெளியிடுவோம் : பொதுபல சேனா மிரட்டல்

hakeemமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் உண்மையான செயற்பாடுகளை வெளியிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்திரிக்கா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். சந்திரிக்காவினால் முன்னர் செய்ய முடியாததை தற்போது செய்ய முனைவது பற்றி நாம் கூறுவோம்.

அதேபோல் ஹக்கீமின் விடயங்கள் பற்றியும் நாம் வெளியிடுவோம். ஜெனிவா போன்ற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் விசேட ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை நாம் வெளியிடுவோம் என்றார்

Tags: , , , ,

Leave a Reply