திருடிய நகைகளை மர்ம உறுப்பில் பதுக்கிய பெண் கைது!

jewelsதிருடிய நகைகளை மர்ம உறுப்பில் மறைத்து வைத்த பெண் நாமக்கல்லில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் தாரா(வயது 32). இவர் வழிப்பறி மற்றும் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரை நாமக்கல் காவல்துறையினர் நேற்று திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். அப்போது தாராவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து வந்து சேர்த்தனர். இங்கு மருத்துவர்கள் தாராவிற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பிறகு தாரா வயிறு மற்றும் அடிப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது அவரது மர்ம உறுப்பில் நகை, பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் நர்சுகள் மர்ம உறுப்பில் இருந்த பிளாஸ்டிக் பையை வெளியே அகற்றினர். அதில் 3 பவுன் தங்க நகை, ரொக்கம் ஆயிரம், கால் பவுன் தோடு ஒன்று, ஒரு மோதிரம் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுபற்றி மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

உடனே அவர்களும் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த நகை, பணம் குறித்து நாமக்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காவல்துறையினர் வந்து தாராவிடம் விசாரித்து வருகிறார்கள்.

தாரா திருடிய பணம், நகைகளை காவல்துறைக்கு தெரியாமல் மறைத்து உடலில் எடுத்து வந்துள்ளார். இதை அவர் வெளியில் எடுப்பதற்குள் சிறைக்கு கொண்டு வந்து விட்டனர். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் நகை, பணம் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: , , ,

Leave a Reply