அண்மையில் காணாமல் பொன மலேஷிய விமானத்தை கண்டு பிடிக்க உதவிகளை வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கோரிக்கை விடுக்கப்பட்டால் எந்த வகையிலான உதவிகளையும் வழங்கத் தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமூத்திரத்தின் ஆழ் கடலில் இந்த விமானம் வீழ்ந்திருக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விமானம் பற்றிய சரியான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
















