தமிழர்களின் நூறு ஏக்கர் நிலம் இராணுவக் குடும்பங்களுக்கு?

land-ravi5

வவுனியா பாவற்குளத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்த மான சுமார் நூறு ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் குடும் பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் அதற்கான ஆதாரங்களையும் வட மாகாண சபை அமர்வின் போது காண்பித்தனர். வடக்கு மாகாண சபையின் நேற்றைய 7ஆவது அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவினால் முன் மொழியப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதத்தின் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட பிரேரணையில், வவுனியா மாவட் டத்தில் வெண்கலச் செட்டிக் குளம் பிரதேச செயலகப் பிரதே சத்துக்குட்பட்ட பாவற்குளம் யூனிற்றில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான நூறு ஏக்கருக்கு மேலான கா ணியை அரசு கையகப்படுத்தி வவுனியா தெற்குப் பிரதேச செயலகத்தின் ஊடாக படையினர் குடும்பங்களையோ அல்லது வேறு எவரையுமோ குடியேற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படல் வேண்டு மென வவுனியா மாவட்ட அரச அதிபரை இந்தச் சபை கோருகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானம் தொடர் பான விவாதத்தின் போதே, இராணுவத்தின் 600 குடும் பங்களைக் குடியமர்த்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு வது தொடர்பில் குற்றஞ்சாட் டினர். வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கள் இ.இந்திரரசா, அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்க நாதன் ஆகியோரே ஆதாரங்களுடன் தமது கருத்துக்களை முன்வைத்தனர். “”குறித்த பகுதியில் போருக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். போரின் பின்னர் அவர்கள் வெளியேறியுள்ள னர். வவுனியா மாவட்டத்தில் தமிழ் d சிங்கள முஸ்லிம் மக் கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்று மையைச் சீர்குலைக்கும் நோக்குடனேயே குறித்த சிங்களக் குடியேற்றம் திட்ட மிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த பகுதியில் பிரதான வீதியோரமாக காட்டுப் பிரதேசம் அப்படியே இருக்க, உள்ளுக்குள் வீதிகள் அமைத்து பொதுக்கிணறுகள் வெட்டி குடி யேற்றத்துக்குரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்கு இராணுவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இராணுவ முகாமிலிருந் தவர்களிடம் கேட்ட போது, அனுராதபுரத்திற்கு அப்பாலுள்ள தமது குடும்பங்களில் 120 குடும்பங்களை முதற்கட்டமாகவும் எஞ்சிய 420 குடும்பங்களை பின்னரும் குடியேற்றப் போவதாகத் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணி வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள டங்குகின்ற போதும், செட்டிக் குளம் பிரதேச செயலரின் அனு மதி பெறப்படாது, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயல ரின் அனுமதியோடு இந்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகின்றன என்று அவர் கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட எதிர்கட்ச்சி உறுப்பினர் உறுப்பினர் ஜெயத்திலக, குறித்த காணியில் தமிழ் மக்கள் தாங்கள் இருந்தமைக்கான உறுதியைக் காண்பித்தால் விடுவிப்பதாக அரச அதிபர் தெரிவித்திருக்கின்றார் என்றார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சத்தியலிங்கம், ஓர் பொறுப்புள்ள அரச அதிகாரியின் செயலா இது. நாம் இது பற்றிக் கேள்வி யெழுப்பியதும் இவ்வாறு தெரிவிக்கின்றார். இல்லாவிடின் என்ன நடந்தி ருக்கும்? என்று கேள்வியெழுப்பினார். அத்துடன் ஜி.ரி.லிங்கநாதன் இதுகுறித்துக் கூறுகையில், முதலமைச்சருக்கு கீழேதான் காணி அதிகாரங்கள் இருக் கின்றன. எனவே முதலமைச்சர் இந்த விடயத்தில் துணிந்து களமிறங்கி தடுத்து நிறுத்த வேண்டும் – என்று கோரிக்கை விடுத்தார்.

Tags: , ,

Leave a Reply