இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும். அத்துடன் கருத்து சுதந்திரத்தின் விதி முறைகளை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் வழக்கறிஞர்களும் குடும்பத்தினர்களும் அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்றும் பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹ்யூகோஸ்வைர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அவர்களது பேச்சுரிமைக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும்.
இரண்டு மனித உரிமை செய்ற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்தமைக்கு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். கைது செய்யப்பட்ட இருவரினதும் குடும்பங்களும் வழக்கறிஞர்களும் அவர்களை அணுக அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும்.
இதேவேளை, தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மனித உரிமை பேரவை ஏன் இலங்கை மீது அவதானம் செலுத்த வேண்டும் என்பதனை இந்த விடயங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன

















