ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள்

jaffna-protest

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயகுமாரியை பூசா தடுப்பு முகாமில் சென்று சந்தித்துள்ளனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள்.
குறித்த சந்திப்பானது இன்றைய தினமும் நேற்றைய தினமும் இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பின் போது பாலேந்திரா ஜெயகுமாரியிடம் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான உண்மைச்சம்பவத்தினை கேட்டறிந்துள்ளனர்.

இதேவேளை ஏனைய கைதிகளை பார்வையிடுவதனைப் போன்றே ஜெயகுமாரியை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு தாங்கள் அனுமதி வழங்கியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply