புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் இணையம் மூலமாக சாரதிகளுக்கான அனுமதி பத்திரத்தை (Driving License) விண்ணப்பிக்கவும், பதிவு செய்யவும் கூடியதான செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த இணையம் ஊடான பதிவு சாரதி அனுமதி பத்திர பதிவு முறை நேற்று களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்த பதிவு முறை கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுவதாகவும், கூடிய விரைவில் யாழ் மற்றும் கண்டியில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் நேரடியாக சென்று பதிவு செய்யும் நேரம் மற்றும் பணம் விரயம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















