காணாமல் போன மலேசிய விமானத்தின் புதிய ராடார் டேட்டாவை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும், கூடிய விரைவில் விமானம் கண்டுபிடிக்கப்படும் என்றும் மலேசிய அரசு முதல்முறையாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது விமானம் எந்த நாட்டில் இருக்கிறது என்ற தகவலை அரசு வெளியிட மறுத்துவிட்டது.
இதனிடையே விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அரசுக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டனர். மலேசிய அரசு எதையோ மறைக்க முயல்கிறது என்றும் விமானம் குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் பயணிகளின் உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். பெரும் பிரச்சனை செய்ததாக கூறி இரண்டு பெண்களை மலேசிய விமான அதிகாரிகள் தனியறையில் அடைத்து வைத்துள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மாயமான விமானம் மாலத்தீவு பகுதியில் இருக்கின்றது என்ற கருத்தை மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. 26 நாடுகளின் மீட்புப்படைகள் இன்னும் விமானத்தை தேடிக்கொண்டே தான் இருக்கிறது.

















