சிவாஜி பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் உல்டாதான் ராமராஜன் , கனகா நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் படம்.
கரகாட்டக்காரன் வெளியான சில வருடங்களில் ரகுமான், விந்தியா நடிப்பில் சங்கமம் என்ற படம் வெளியானது. இதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்திள் உல்டாதான்.
இதோ மூன்றாவது தடவையாக தில்லானா மோகனாம்பாள் படம் உல்டா செய்யப்படவிருக்கிறது.
படத்தின் பெயர் – தாரை தப்பட்டை.
பரதேசி’ படத்தை அடுத்து பாலா இயக்கும் படம் இது.
இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
சுப்ரமணியபுரம் எம். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.
‘தாரை தப்பட்டை’ என்று தலைப்பு வைக்கப்பட்டாலும் இந்த படத்தில் சசிகுமாருக்கு நாதஸ்வர வித்வான் வேடம். தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி ஏற்றதும் நாதஸ்வர வித்வான் வேடம்தான்.
கரகாட்டம் ஆடுபவராக வரலட்சுமி நடிக்கிறார். கரகாட்டக்காரன் படத்தில் கனகா நடித்ததும் கரகாட்டம் ஆடுகிற பெண் வேடம்தான்.
தில்லானா மோகனாம்பாள் படத்தின் தழுவல் என்று தெரியக்கூடாது என்பதற்காகவோ என்னவோ, கதாநாயகியின் தலையில் கரகத்தை வைத்திருக்கிறார்.
இப்படத்திற்காக நாதஸ்வரக் கலைஞராக நடிக்கும் சசிகுமாருக்கும், கரகாட்டம் ஆடுபவராக நடிக்கும் வரலட்சுமிக்கும் சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறாராம் பாலா.
இந்த படத்திற்காக இளையராஜா இசையமைப்பில் ஏற்கெனவே 12 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன.
தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கிறதாம்.
















