பிரிட்டனால் ஐ.நாவுக்கு மேலும் ஒரு அறிக்கை

un-human-rights-council_0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மேலும் ஒரு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு பிரிட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கையில் போர் முடிவுற்று 2009 ஆம் ஆண்டு சமாதானம் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் தமிழர்கள் பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அதன்படி இலங்கைத் தமிழர்கள் 40பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது பெறப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிலையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் சென்ற இலங்கைத் தமிழர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதேபோன்று, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தையான டெஸ்மண்ட் டுட்டுவின் கருத்தும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இந்த அறிக்கை 110 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றினை கொண்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply