பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாநிலத்தில் டிரக் வண்டியொன்று இரு பஸ்கள் மீது மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 35 பேர் பலியாகியுள்ளனர்.
பலோஸிஸ்தானிலுள்ள ஆர்.கி.டி நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்த பஸ்கள் இரண்டும் எதிரே வந்த டிரக் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
டிரக் வண்டியில் பெற்றோல் எடுத்து வரப்பட்டிருந்ததால் விபத்தையடுத்து மூன்று வாகனங்களுமே தீப்பற்றி எரிந்துள்ளன.
இந்த விபத்தையடுத்து அந்த நெடுஞ்சாலையிலான போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டன

















