இராணுவ பயிற்சியின் போது தமிழ் பெண்கள் துன்புறுத்தப்பட்டது உண்மை – இராணுவ தளபதி கருத்து.!

Tamilgirls

இலங்கையில் இராணுவ பயிற்சியின் போது தமிழ் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக காணொளி வெளியாகியதை தொடர்ந்து தமிழ் பெண்கள் துன்புறுத்தப்பட்டது உண்மை தான் என இலங்கையின் இராணுவ தளபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது 2012ம் ஆண்டு இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்கு அநுராதபுரத்தில் இடம்பெற்ற பயிற்சியின் போது துன்புறுத்தல் இடம்பற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த காணொளி யூட்யூப் தளத்தில் வெளியானததை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது.

இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க ஆணையிட்ட இராணுவ தளபதி, இதில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தில் கடும் தண்டனை முறைகள் இருக்கின்ற போதிலும், இது தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்றதாக தெரிவதாகவும் அவர் கூறினார்.

Tags: , , ,

Leave a Reply