பிரபல நடிகைகளுக்கு எப்போது காதல் வரும் என்றே சொல்ல முடியாது. திடீரென்று ஒருநாள் ஒரு தொழிலதிபர் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார். சில நடிகைகள் தொடர்ந்து ரெண்டு, மூணு படங்களில் சேர்ந்து நடிக்கும் நடிகர்களின் காதல் வலையில் விழுந்து விடுவார்கள்.
ஆனால் சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே ஒரு நடிகரின் காதல் வலையில் விழுந்து விட்டார் நடிகை இலியானா.
‘மெய்ன் தேரா ஹீரோ’ படத்தில் வருண் தவானுடன் இணைந்து நடித்த போது கொஞ்சம் ஓவராகவே கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகி விட்டது போலும், வார்த்தைக்கு வார்த்தை அவரைத்தான் புகழ்ந்து தள்ளுகிறார் இலியானா.
“எனக்கு கணவராக வருபவர் வருண் தவான் போல இருக்க வேண்டும். மற்ற ஆண்களில் இருந்து அவர் தனித்து தெரிகிறார் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடன் எனது உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் மிக அழகான, பக்குவமடைந்த மற்றும் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை அறிந்தவர். அவரது அந்த குணங்கள் எல்லாமே எனது வருங்கால வாழக்கை துணைவரிடமும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், வருணுடன் எனது கெமிஸ்ட்ரி வேறு மாதிரியாக எங்களை ஒன்றிணைந்து உள்ளது” என்று கூறியுள்ளார் இலியானா.
இவர்கள் இணைந்து நடித்த இந்தப்படம் வருகிற ஏப்ரல்-4 ஆம் தேதி தான் ரிலீசாக உள்ளது.

















