7 ஆம் அறிவு பாதி, அன்னியன் பாதி – கலந்து செய்த கலவையா உத்தமவில்லன்?

uthamavillanகமல் நடிக்கும் உத்தமவில்லன் படம் பற்றி தினம் ஒரு தகவல் காதில் விழுகிறது.

லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா?

7 ஆம் அறிவு, அன்னியன் படங்களில் இடம்பெற்ற சில காட்சிகளை ஞாபகப்படுத்துவதுபோல் உத்தமவில்லன் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது – என்பதே அந்த தகவல்.

‘உத்தமன்’ என்ற 8 ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21 ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாகவும் கமல் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அல்லவா?

இவ்விரு கதாபாத்திரங்களையும் எப்படி ஒன்றிணைக்கப்போகிறார்கள் என்பதே உத்தமவில்லன் படத்தின் சுவாரஸ்யம்.

நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்…

7 ஆம் அறிவு படத்தில் போதி தர்மனையும், சர்க்கஸ் கலைஞன் அரவிந்த் கதாபாத்திரத்தையும் டிஎன்ஏ அடிப்படையில் இணைத்ததுபோல், உத்தமவில்லன் படத்திலும் காட்சிகள் இருக்கிறதாம்.

7 ஆம் அறிவு படத்தில் சீரியஸாகக் கையாளப்பட்ட இந்த விஷயத்தை உத்தமவில்லன் படத்தில் சிரிக்கச் சிரிக்க சொல்ல இருக்கிறார்களாம்.

அதோடு, அன்னியன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அம்பி, ரெமோ, அன்னியன் ஒரே நேரத்தில் வெளிப்படுகிற அந்த உத்தியையும் உத்தமவில்லன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறாராம் கமல்.

7 ஆம் அறிவு பாதி, அன்னியன் பாதி – கலந்து செய்த கலவையா உத்தமவில்லன்?

Tags: , ,

Leave a Reply