துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவதில் இராணுவத்தினர் தீவிரம்

VaVunia

வவுனியாவில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறன.

‘இது உங்களதும் உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது’ என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் ”இலங்கையின் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மூன்று தசாப்த மோதல்கள் நிறைவு பெற்று அபிவிருத்திமூலம் நன்மையை அனுபவிக்கின்றனர். கொடிய பயங்கரவாதிகளின் மோதல்களின் மூலம் கோடிக்கணக்கான சொத்திழப்புகள் உயிரிழப்புகள் விதவைத் தன்மை என பல இழப்புகள் ஏற்பட்டன. தற்போதைய சமாதான செயற்பாட்டின் மூலம் புலிப்பயம் நீங்கியுள்ளதோடு புலி ஆதரவு செயற்பாடுகளும் அற்றுப்போயுள்ளன.

ஆனால் வெளிநாட்டில் வாழும் புலி ஆதரவாளர்களுக்கு இங்குள்ள மக்களின் புலி மறந்த தன்மை பிடிக்கவில்லை. அவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து புலி ஆதரவு இணையத்தளங்கள் மூலம் பரப்பி அந்த செயற்பாடுகளுக்கு ஆதரவு தேடுகின்றனர். இங்குள்ள வறிய இளைஞர்களுக்கு அதிகளவு பணம் அனுப்பி அழிவு வேலைகளுக்கு தூண்டி விடுகின்றனர்.

இந்த சிறிய குழுவின் வேலைகள் பற்றி அறிந்துள்ளோம். அண்மையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த நபர்கள் பளையில் கைது செய்யப்பட்டனர். பாரிய விலை கொடுத்து பெற்ற சமாதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் உங்கள் பிரதேசத்திலும் இருக்கமுடியும். இந்த நடவடிக்கைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. இதற்கு துணைபோகாமல் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – பாதுகாப்பு படையினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழிலும் நேற்று முதல் இவ்வாறான துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply