ஐ.நாவின் தீர்மானத்தை அமுல்படுத்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் உதவியை நாடவுள்ளது?

un-lk

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் Nபுரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு மனித உரிமைப் பேரவை இலங்கையின் உதவியை நாட உள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யுத்தக் குற்றச் செயல் விசாரணை உள்ளிட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு நாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வெளியே இருந்து கொண்டு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் ரேவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசாரணை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறு வேறும் நாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநேகமான சர்வதேச விசாரணைகளினால் குறிப்பிட்ட அசராங்கங்களங்கள் நன்மை அடைந்ததில்லை எனவும், இதனால் வெளியே இருந்து கொண்டு விசாரணை நடத்துவது சாத்தியமானது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையை ஓரம் கட்ட எத்தனிப்பதாகவும், பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply