தேர்தல் ஆணையாளர் அராங்கத்தின் கைப்பொம்மையாகவே செயற்பட்டு வருகின்றார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யும்போது அவற்றை, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கண்டுகொள்வதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் ஓர் கைப்பொம்மையாகவே தேர்தல் ஆணையாளர் செறய்பட்டு வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை எனவும், ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.துரித கதியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு ஏதேச்சாதிகார போக்கில் ஆட்சி நடத்தி வரும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுடன் கை கோர்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

















