பிரசவத்திற்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் பதுளை பொலிஸாரிடமும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.
உடகோஹோவில, லந்தேவேல தோட்டத்தைச் சேர்ந்த பிரதீபிகா நிலந்த என்ற 32 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















