2015க்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோரப்படும்!- ரணில்

ranil_unp

2015ம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ளது.

இந்த நிலையில் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே பி வி போன்ற எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் வழங்கவில்லை.

Tags: , , ,

Leave a Reply