தனது 11 வயது மகள் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும் வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என கவலையடைந்திருந்த மோசமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையொருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மணமகனின்றி திருமண நிகழ்வொன்று இடம்பெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
முர்ரியரா நகரைச் சேர்ந்த ஜிம் ஸெட்ஸ் என்பவரே தனது 11 வயது மகளாகிய ஜோஸியின் திருமணத்தைப் பார்க்காமல் மரணமாகப் போகிறோம் என்று கவலையடைந்திருந்தார்.
இந்நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஜிம் ஸெஸ்டாவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் தீர்மானித்தனர்.
கடந்த மார்ச் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று புதன்கிழமை செய்தியினை வெளியிட்டிருந்தது.

















