பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக அமைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கின் அபிவிருத்தியையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிப்பதில்லை.
வைக்கல் பட்டறை நாய்களைப் பேன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
மாகாணசபைகளின் மூலம் அன்றாட மக்களின் பிரச்சினைகளையும், அரசியல் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களின் உணர்வுகளைத் தூண்டி போலி வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றியீட்டியது.
13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசம் மற்றும் பிரதேச மக்களின் அபிவிருத்தியை முடக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
பிரதேச மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

















