மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்திய விளையாட்டு விழா

mad-sport1மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் 26வது பிரதேச இளைஞர் விளையாட்டு விழா மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

mad-sport2பட்டிப்பளை பிரதேச சம்மேளன தலைவர் சி.கோகுலதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஆ.டு.ஆ.N.நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை அலுவலகர் திருமதி.ஜே.கலாராணி, அரசடித்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் பொ.நேசதுரை, பட்டிப்பளை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தா.திருநாவுக்கரசு, கொக்கட்டிச்சோலை இலங்கை வங்கி முகாமையாளர் ஞா.அரவிந்தன்;, பட்டிப்பளை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.நிலக்ஷன், பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆண் பெண்களுக்கான 100 மீற்றர்; ஓட்டம், அஞ்சல் ஓட்டம், உதைபந்தாட்ட இறுதிப்போட்டி, பார்வையாளர்களுக்கான கயிறு இழுத்தல் போன்ற போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

இவ்விளையாட்டு நிகழ்வில் 247 புள்ளி பெற்று முனைக்காடு விவேகானந்தா இளைஞர் கழகம் முதலாம் இடத்தையும், 162 புள்ளி பெற்று மகிழடித்தீவு மகிழை இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும், 38 புள்ளிகளைப் பெற்று மாவடிமுன்மாரி ஸ்ரீ விநாயகர் இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இங்கு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கும், முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்ற இளைஞர் கழகத்திற்கும் கலந்து கொண்ட அதிதிகளால் வெற்றிக் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விளையாட்டு நிகழ்வுகள் யாவும் பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலனின் வழிகாட்டலிலும், ஒழுங்கமைப்பிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , , ,

Leave a Reply