சர்வதேச விசாரணைகள் குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்துமாறு வலியுறுத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த கால தவறுகளுக்கு தண்டனை விதித்தல் அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாக பல நாடுகளுடன் இலங்கை நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
















