திமுகவிலிருந்து வைகோ வெளியேறியதற்கான காரணத்தை மு.க.அழகிரி வெளியிட்டுள்ளார்.
கம்பத்தில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல விழாவில் அழகிரி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், வைகோ, தேனி தொகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் அவர் ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளார்.
அதை நம்பி, மதிமுக இத்தொகுதியில் போட்டியிடுகிறது. அதுபோல, ஜே.எம். ஆரூண் எம்.பி-யும் 2 முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். அதனால், அவரும் மீண்டும் நிற்கிறார்.
ஆனால், திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் எதற்காக இந்தத் தொகுதியில் நிற்கிறார்? அவருக்கு என்ன தகுதி உள்ளது? அவரது ஒரே தகுதி, சாதனை கட்சி விட்டு கட்சி தாவுவதுதான். மதிமுகவில் இருந்த அவரை மீண்டும் திமுகவுக்கு கொண்டு வந்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.
வைகோ, திமுகவை விட்டு வெளியேற முக்கியக் காரணம் இந்த பொன்.முத்துராமலிங்கம்தான் என்றும் அவரை ஏற்றிவிட்டு ஏற்றி விட்டே, தனிக்கட்சி (ம.தி.மு.க) தொடங்க வைத்தார். பிறகு அவருக்கும் துரோகம் செய்துவிட்டு திமுகவுக்கு வந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.

















