“ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவனம் இணைந்து தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி இந்தப் படத்தின் மீது உலகம் முழுவதிலிருந்தும் தமிழ் இன உணர்வாளர்கள் கடந்த சில நாட்களாக கத்தியை வீசி வருகின்றன.
அதாவது, கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனத்தின் அதிபரான சுபாஸ்கரன் அழகுராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்பதே குற்றச்சாட்டு. அதை மறுக்கும்விதமாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி இந்த பிரச்சனை பற்றி சில விளக்கங்களையும் அளித்தார். அதன் சாரம்சம் என்ன தெரியுமா?
லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை – என்பதுதான். இது குறித்த செய்தியை தமிழ்ஸ்கிரீன் வெளியிட்ட சிறிது நேரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், லைகா மொபைல் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் ஆதாரமாக ஒரு புகைப்படத்தை நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார் லண்டனைச் சேர்ந்த வாசகர் ஒருவர். இலங்கையில் நடைபெற்ற, காமென்வெல்த் மாநாட்டுக்கு லைகா மொபைல் நிறுவனம்தான் மெயின் ஸ்பான்ஸர். அதில் ராஜபக்சே உரையாற்றும் புகைப்படமே அது. கத்தி தயாரிப்பாளர்கள் இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறார்கள்
















