நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் வெளிநாட்டு பயணம் ஒன்று செல்வதற்காக விமானத்தில் ஏறிக்கொண்டிருக்கும்போது தனது மனைவி மிச்சேல் ஒபாமாவின் குட்டை ஸ்கர்ட் காற்றில் மேலெழும்பியதை கண்டு உடனே தனது கையால் தடுத்து மனைவியின் மானத்தை காப்பாற்றினார். இதுபோன்ற ஒரு சம்பவம் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனுக்கு கடந்த வாரம் நியூசிலாந்தில் நடந்தபோது அவருக்கு உதவி செய்ய அருகில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை அமெரிக்காவில் Houston விமான நிலையத்தில் Air Force One விமானத்தில் வெளிநாடு செல்வதற்காக தனது மனைவி Michelle அவர்களுடன் விமான படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும்போது திடீரென பயங்கர காற்று அடித்தது. அந்த காற்றில் Michelle அணிந்திருந்த குட்டையான ஸ்கர்ட் மேலெழும்பியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஒபாமா,உடனடியாக தனது கையால் Michelle அவர்களின் ஸ்கர்ட்டை பிடித்து போட்டோகிராபர்களிடம் இருந்து மனைவியின் மானத்தை காப்பாற்றினார்.
இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த வாரம் பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் நியூசிலாந்து நாட்டின் விமானத்தில் இருந்து குழந்தையை கையில் வைத்துக்கொண்டு இறங்கியபோது அவருடைய உடையும் காற்றில் மேலெழும்பியது. ஆனால் அவருக்கு உதவி செய்ய யாரும் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















