பிரபலமான நடிகைகள் மூவர் பிரசாரம் செய்ய வந்ததால், கிராமம் ஒன்றின் சாலைகளை தூசி இல்லாமல் தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர் அதிகாரிகள்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை மூன்மூன் சென்.
அவரது மகள்களான ரைமா மற்றும் ரியா சென் ஆகியோர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமூல் கட்சி சார்பில் பங்குரா தொகுதியில் நடிகை மூன்மூன் சென் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து பங்குரா தொகுதிக்குட்பட்ட சியாமாபூர் கிராமத்தில் நேற்று தனது மகள்களுடன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார்.
இவர்கள் மீது தூசி படாமல் இருக்க சியாமாபூர் கிராம சாலை 3 கிமீ தூரம் வரை தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் குடிக்கவே நீரை காணவில்லை. இதில் நீரை இப்படி சாலைகளை கழுவ பயன்படுத்துகிறார்களே என்று சியாமாபூர்வாசிகள் கடுப்பாகியுள்ளனர்.
ஒவ்வொரு கோடை காலத்திலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, ஏன் வீட்டுத் தேவைகளுக்கு கூட குழாய்களில் நீர் வருவது இல்லை.
இந்நிலையில் நடிகைகளுக்காக நீரை வீணடித்துள்ளது மக்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
















