எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்க்பபடுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது.
ஊவா தேர்தல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் கிரக நிலைக்கு அமைய 2015 ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு பின்னரே தேர்தல் நடத்த வேண்டுமென சிரேஸ்ட ஜோதிடரும், ஜனாதிபதியின் ஜோதிட ஆலோசகருமான தேசபந்து சுமனதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
















