எனது கையில் இருந்தது விளையாட்டுத் துப்பாக்கி! – காவிந்த பெனாண்டோ

ka-penaஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது தான் கையில் வைத்திருந்தது விளையாட்டுத் துப்பாக்கி என ஹம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் எராஜ் காவிந்த பெனாண்டோ தெரிவித்தார்.

ஐதேக கட்சி பிரதிநிதிகளை சஜித் குழு தாக்குவதற்கு தயாராக இருந்ததாகவும் அதன் காரணமாகவே தான் அந்த இடத்திற்குச் சென்றதாகவும் அவர் அத தெரணவிடம் குறிப்பிட்டார்.

எனினும் கோயிலுக்குச் சென்றவன் மீது கோபுரம் இடிந்து விழுந்த கதையாக தன்நிலை மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தான் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது மத்தல சென்ற ஐதேக பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் என தகவல் கிடைத்ததுடன் அவர்கள் துறைமுகம் பார்க்கச் செல்வதாக அறியக்கிடைத்ததை அடுத்து அங்கு சென்றதாக அவர் அத தெரணவிடம் கூறினார்.

அப்போது ஒரு குழு கூடியிருந்ததாகவும் அதில் ஐதேக உறுப்பினர்களும் இருந்ததாகவும் கொழும்பில் இருந்து வந்த ஐதேக பிரதிநிதிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என தான் கூறியதாகவும் காவிந்த பெனாண்டோ கூறினார்.

ஆனால் தேர்தல் காலத்தில் ஹம்பாந்தோட்டைக்கு வந்து ஐதேகவிற்கு பிரச்சாரம் செய்யாமல் கொழுபில் இருந்து விமர்சித்தவர்கள் இவர்கள் எனக்கூறி சஜித் குழுவினர் அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஐதேக பிரதிநிதிகளுக்கு எதிரான குழுவினரை பயமுறுத்தவே தான் கையில் விளையாட்டுத் துப்பாக்கி எடுத்துச் சென்றதாக ஹம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் அத தெரணவிடம் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply