குமரன் பத்மநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தம் – முழுமையாக நீக்கப்பட்டவில்லை. இன்டர்போல் பிடிவிராந்து தொடர்கிறது

kp9தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்ப்படும் கே.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச காவல்துறையினரான இன்டர்போலினால் குமரன் பத்மநாதனுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக முன்னர் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதம், வெடிபொருள் மற்றும் ஆயுத பயன்பாடு தொடர்பில் தேடப்பட்டு வரும் நபராக குமரன் பத்மநாதனின் பெயர் இணைக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அந்தக் குற்றச்சாட்டுகு;களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய வெடிபொருள் சட்டத்தை மீறியமை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வருவதாக இன்டர்போல் பிடிவிராந்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடனும் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குமரன் பத்மநாதன் தற்போது கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

Tags: , ,

Leave a Reply