யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற இடம்பெறும் 21 நாடுகளில் பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த நாடுகளின் வரிகையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைகளைத் தடுக்க கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பிராந்திய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஐவரி கோஸ்ட், கொங்கொ, இலங்கை, தென் சூடான், மாலி, சிரியா உள்ளிட்ட 21 நாடுகளில் பாலியல் வன்கொடுமைகள் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















