சட்டவிரோதமான நாட்டை விட்டு சென்றவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்

igp-lkசட்டவிரோதமான முறையில் நாட்டை விட்ட வெளியேறியவர்களின் பெயர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் கைது செய்பபட்ட ஒருவர் 600 பேரை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாடு கடத்தியவர்கள், காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் வரிசையில் இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply