இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியாவிற்கும்; தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வெயார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது என ஸ்வெயார் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















