ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், கடலோர பகுதிகளில் வாழ்பவர்களை அரசு எச்சரித்துள்ளது.
இன்று அதிகாலை ஜப்பான் நேரப்படி 5.18 மணிப்படி டோக்கியோவில் 6 ரிக்டர் அளவில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. டோக்கியோவில் இருந்து 160 கி.மீ தூரத்தில் உள்ள Izu Oshima என்ற தீவுப்பகுதியை மையமாக வைத்து இந்த பூகம்பம் தாக்கியதாகவும், இந்த பூகம்பத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் ஜப்பானின் The Japan Meteorological Agency தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் டோக்கியோவில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதிக்குள்ள்ளானர்கள். கட்டிங்களை விட்டு வெளியே ஓடிவந்து சாலையில் கூட்டம்கூட்டமாக அச்சத்துடன் தங்கள் கட்டிடங்களை பார்த்து வருகின்றனர்.
இந்த பூகம்பத்தால் புகுஷிமா அணுநிலையத்திற்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என The national broadcaster NHK அறிவித்துள்ளது. டோக்கியோ நகர் முழுவதும் இன்று ரயில் போக்குவரத்து ஒரு சில இடங்களில் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், சில இடங்களில் ரயிலின் வேகத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
















