காமெடி நடிகர் சந்தானம் சமீபகாலமாக எந்தப் படத்தின் ஆடியோ பங்ஷன் உள்ளிட்ட புரமோஷன் வேலைகளுக்கும் வருவதில்லை.
நடிகைகள் பப்ளிசிட்டிக்கு வரவில்லை என்றால் மட்டும் அவர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்வோம் என்று கூப்பாடு போடும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்தானம் வராததைப் பற்றி மேடைகளில் பேசுவதே இல்லை.
அவரை விட்டால் தமிழ்சினிமாவில் காமெடி செய்ய ஆள் இல்லாத நிலைமை தான் சந்தானம் இப்படி நடந்து கொள்ள காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தயாரிப்பாளர்களும் அவரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று அவர் ஹீரோவாக நடித்து, பி.வி.பி சினிமாஸ் உடன் இணைந்து தயாரித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் பிரஸ்மீட்டில் முதல் முறையாக மீடியாக்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “படங்கள்ல நடிக்கிறதுக்கும், பண்ணின படங்களை டப்பிங் பண்றதுக்கும், பஞ்ச் எழுதுறதுக்கும், அப்புறம் போன் பண்ணி ஹீரோக்கள் யாராவது பஞ்ச் கேட்டா அதை யோசிச்சிச் சொல்றதுக்குமே டைம் சரியாப் போச்சு. அதனால தான் உங்களை என்னால பெர்சனலா மீட் பண்ண முடியல. உங்களை எல்லாம் மீட் பண்ணனும், மீட் பண்ணனும்கிற ஆதங்கம் மட்டும் மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு.
எல்லாப் படங்களோட பங்ஷன்லேயும் மீட் பண்ணி, பேசின விஷயத்தையே பேசினா அதுவே உங்களுக்கு போரடிச்சிடும். அதனால உங்களை மீட் பண்ணனும்னா ஏதாவது ஒரு பெரிய விஷயம் இருக்கணும்னு நெனைச்சேன். அதற்கான வாய்ப்பு இப்போ தான் அமைஞ்சது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஒரு சேனல் நிருபர் ”இது உங்க சொந்தப்படம்கிறதுனால மட்டும் எங்களையெல்லாம் மீட் பண்ணி இண்டர்வியூவ் குடுக்குறீங்க.., அதுவே மத்த படங்களோட பப்ளிசிட்டின்னா ஒரு குறிப்பிட்ட சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுக்குறீங்க… இந்த மாதிரி நீங்க எங்களுக்கு இண்டர்வியூவ் குடுக்குறதில்லையே..? என்றார்.
அதற்கு பதிலளித்த சந்தனம் “ அப்படி இல்லை சார். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் சன் டிவியில் இருந்து கேப்டன் டிவி வரைக்கும் எல்லா டிவிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுல பேட்டி கொடுத்தேன்.
பக்கத்துல இருந்தவங்க கூட ஏன் சார் எல்லா டிவிக்கும் பேட்டி குடுக்குறீங்கன்னு சொன்னாங்க. நாந்தான் ஒரு டிவிக்கு குடுத்துட்டு இன்னொரு டிவிக்கு குடுக்கலேன்னா அது நல்லாயிருக்காதுன்னு சொன்னேன். அப்படியெல்லாம் குறிப்பிட்ட சேனல்களுக்குன்னு நான் பேட்டி குடுத்ததே இல்லை. நீங்க வேணும்னா செக் பண்ணிக்கலாம் என்றார்.
ஆனால் சேனல் நிருபரோ அது உங்க கணக்கா இருக்கும். எங்களுக்கு நீங்க குடுக்கவே இல்லை என்றார். மேற்கொண்டு அதற்கு பதிலளிக்க முடியாமல் சங்கடப்பட்ட சந்தானம் அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.
















