ஒவ்வொரு நாளும் புதுப்புது டிசைன்களில் உடைகள் வெளியாகி வரும் வேளையில் பெல்ஜியம் நாட்டில் நிர்வாண ஜீன்ஸ் என்ற புதுவகை உடையை அறிமுகம் செய்திருக்கிறார் பெல்ஜியம் பெயிண்ட் டிசைனர் Marie P” Przybylski என்ற இளம்பெண்.
இவர் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாண ஜின்ஸ் அணிந்துவிடுகிறார். அதாவது அவர்களுடைய நிர்வாண உடலில் பெயிண்டினால் ஜீன்ஸ் படம் வரைந்து அனுப்புகிறார்.
இந்த ஜீன்ஸை தற்போது பெல்ஜியம் நகர இளம்பெண்கள் விரும்பி அணிகின்றனர். தினம் பல பெண்கள் இவரிடம் வந்து ஜீன்ஸ் ஆடைபோன்ற பெயிண்டிங் வரைந்து கொண்டு செல்கின்றனர்.
இந்த புதிய வகை ஆடையை தடைசெய்யுமாறு பெல்ஜியம் நாட்டின் சில அமைப்புகள் போர்க்கொடி செய்து வருகின்றன. நிர்வாண கலாசாரத்தை ஊக்குவித்தால் இளம் வயதினர் படுகுழியில் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகும் எனகூறி அவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
பெயிண்டினால் ஜீன்ஸ் மட்டுமின்றி டிரெளசர்கள் மற்றும் மேலாடைகளையும் இவர் வரைந்து தருகிறார். ஒருவருக்கு ஜீன்ஸ் பெயிண்ட் வரைய இவர் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். ஒரு ஜீன்ஸ் வரைவதற்கு இவர் வாங்கும் தொகை $10 மட்டுமே.
















